Wednesday, 29 June 2011

.



என் உயிரை வருடிய, என் நேசத்துக்குரிய என் பாசத்துக்குரிய என் அன்புள்ளங்களே!

நேயர்கள் - அறிவிப்பாளர் என்ற நிலைகளைத்தாண்டி நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு இப்பிறப்பில் என்ன கைமாறு செய்வேனோ?
 என் இப்பிறப்பில் கிடைத்தற்கரிய நேச உறவுகளான உங்களை தந்த அந்த வல்லமையை நான் வணங்குகிறேன்.
தினேஸ் நிகழ்ச்சிநேரத்தை வழங்கியபோது, என் பிறந்த நாள் 26.06.2011 அன்று என்பதை அறிந்து வாழ்த்துக்கள் சொன்னதன் பின் நேய உள்ளங்கள் வாழ்த்துக்கள் வழங்கியமை என்னால் மறக்கமுடியாது.
அன்று அந்த நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பை என்னால் கேட்க முடியவில்லை.  29.06.2011 அன்று தான்  தினேஸ் அந் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை எனக்கு அனுப்பி வைத்தார்.
இரவு 12.20 இருந்து கேட்க ஆரம்பித்தேன். கண்கள் கலங்கின.

என் மீது நேசம்கொண்டவர்களின் ஆழ்மனதின்வாழ்த்துக்கள் இன்னும் என்னைப்புதுப்பித்தன.
புதிதாக இன்னும் பிறந்தேன்.
என் கடமைகளின் , என் வழமையான பயணத்தின் பாதைகளில் மேலும் கவனத்திசைகளை திருத்திக்கொண்டேன்.
வானலைகளின் வழி என் குரல் கேட்டு என் மீது நேசம் கொண்ட என் உயிர்ப்பாச உறவுகளே!
எப்படி என் மனதை புரிந்தீர்கள் என்று எண்ணி வியந்தேன்.

(நான் ஏதாவது எனது, அல்லது யாராவது ஒருவரின் சின்ன பிழையான விடயங்களுக்காக கோபப்பட்டுவிடுவேன். காரணம் அளவுகடந்த நம்பிக்கை அவர்கள் மேல் வைப்பதும், அளவற்ற பாசம் வைப்பதும் அவர்கள் நன்றாக வரவேண்டும் என்ற ஆசை. உடனே விடயங்களை புரிந்து செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அல்லது அதற்கு நேர் எதிரான  முழுமையான மனித நேயத்துக்கு எதிரான செயல் என்றால்  நம்பிக்கைத்துரோக மென்றால் மனிதத்துக்கு , ஏதாவது உயிருக்கு பாதகமான செயல் என்றால் சுற்றத்தை புரியாது தவறாக நடக்குமிடத்து...(படு மோசமான கூடாத வார்த்தைகள் கூட என்வாயால் வந்து விடும். மனம் வருந்துவேன்.)

நேயர்களை நேசிப்பவன். நான் பிழையான ஆருக்கும். பிழையானவர்களோடும் கூட்டாளி இல்லை. அப்படியான ஆக்கள் எனக்குதேவையும் இல்ல. நம்பவைத்து துரோகம் செய்பவர்களை காலம் தண்டிக்கும். நான் கூடாதா யாருடனும் கூட்டுச்சேர்வதில்லை...என்பணி தமிழ்பணி ..கூடாதவர்களை இனம்கான சாதாரண என் மனித அறிவுக்கு தெரிந்தால், விலகி விடுவேன்.

 நம்பிக்கைக்கு விரோதமென்றால் என்னையறியாமல் சிறு பிள்ளை போல் பயங்கரமான கோபநிலையை அடைவதுண்டு . இது போன்ற விடயத்துக்காக உங்களிடம் குறைவிளங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.)

என்னை நன்றாக புரிந்த உங்கள் அன்புக்கு எப்படி மகிழ்வு சொல்வேன்.